இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் தடுப்பூசி, பலரின் உயிரை காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள், ஏற்படுத்துவது தொடர்பில் ஒரு மாதத்திற்கு பின்பு தான் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பின்பு நேற்று அதிகமான தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால், சுமார் 14,000-த்திற்கும் அதிகமானோரின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 44,000-த்திற்கும் அதிகமானோர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.