Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 மருந்துகள் தயார் …! போட்டி போட்டு கொண்டு நடைபெறும் ஆராய்ச்சி …!

அமெரிக்க நிறுவனமும் இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பு மருந்தை கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றது. வைரஸ்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மேரிலாந்து பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்க உள்ளனர். கடந்த திங்களன்று தன்னார்வலர் ஒருவருக்கு இந்த மருந்தை செலுத்தியுள்ளனர். 18 வயது முதல் 55 வயது வரை இருக்கும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மருந்தைச் செலுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே வயதானவர்களுக்கு மருந்தை செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதேபோன்று இத்தாலியின் ரோம் நகரில் இருக்கும் தொற்றுநோய் ஸ்பாலன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களும் புதிய கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். எலிகள் மேல் நடத்தப்பட்ட மருந்தின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும் மருந்து மனித உடலின் செல்களில் இருக்கும் வைரஸை அழிக்கும் ஆற்றல் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் இது மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |