Categories
உலக செய்திகள்

மக்களே நற்செய்தி : பயன்பாட்டுக்கு வந்த தடுப்பூசி….. வெளியான அதிகாரபூர்வ தகவல்…!!

கொரோனா வைரஸ்கான தடுப்பூசியை வினியோகம் செய்ய தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் கையாண்டு வரும் சூழ்நிலையில், இதனை ஒரேடியாக முடித்து வைக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனாவை தடுக்க, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தேசிய தொற்று நோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கியுள்ள புட்னிக் என்ற தடுப்பூசியின் வினியோகம் தொடங்கிவிட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் மூன்றாவது பரிசோதனை தொடங்கிய நிலையில், மேலும் மக்கள் தொற்றுகளை ஆளாவதை தடுக்கும் நோக்கில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |