Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் நகரம்.. கொரோனா பரிசோதனை கட்டாயம்.. வெளியான தகவல்..!!

ஆக்ஸ்போர்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் பயணங்களை குறைக்க வேண்டும் என்றும் 30 வயதிற்கு குறைந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு நகரத்தில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது வரை, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த நகரம் மட்டுமல்லாமல், வடமேற்கு, பர்மிங்காம் மற்றும் பெட்ஃபோர்ட் போன்ற நகரங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரான லார்ட் பெத்தேல் இது குறித்து கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும், உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து செய்வதாக கூறியுள்ளார்.

Categories

Tech |