அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம், Omicron என்ற புதிய வகை மாறுபாட்டை எதிர்த்து பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதாக நேற்று தெரிவித்திருக்கிறது.
போஸ்ட்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில், Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, இந்த புதிய வகை மாறுபாட்டின் தாக்கம் அங்கு பத்து மடங்காக உயர்ந்திருக்கிறது. விஞ்ஞானிகள், இதனை “வருத்தத்திற்குரிய வைரஸ் வகை” என்ற பிரிவில் இணைத்துள்ளனர்.
போஸ்ட்வானா, மற்றும் அதைச் சுற்றி இருக்கும் 9 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு தீவிரமடைந்து வருகிறது. மேலும், ஹாங்காங், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த புதிய வைரஸ் மாறுபாட்டை எதிர்த்து செயல்படக்கூடிய பூஸ்டர் தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தெரிவித்திருக்கிறது