சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டனூர், மாத்தூர், பீர்க்கலைக்காடு, புதுவயல் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த கொரோனா தடுப்பூசி முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பொதுமக்களிடையே தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அதில் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், மாங்குடி எம்.எல்.ஏ. சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப.சின்னதுரை, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்பாவு ராமசாமி, புதுவயல் நகர காங்கிரஸ் தலைவர் முத்து கண்ணன், கண்டனூர் நகர காங்கிரஸ் தலைவர் குமார் கலந்து கொண்டனர்.