சேலம் மாவட்டத்தில் மாநகாராட்சி பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் நடைபெற்றுள்ளது.
மேலும் சூரமங்கலம் மண்டலத்தில் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த முகாமில் மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் ராம்மோகன், மருத்துவ அலுவலர் செந்தா கிருஷ்ணா, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.