Categories
உலக செய்திகள்

வாரி வழங்கிய வள்ளல்…சடலமாக மீட்கப்பட்ட சோகம்…! பிரான்சில் பரபரப்பு ….!

அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் உயிர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் சுமார் 28.15 பிட்காயின் வடிவிலான தொகையை நிக் பியூன்ட்ஸ் என்பவரது கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பின் போலீசாரின் விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக வீரியம் மிகுந்த போதை பொருள் உட்கொண்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |