Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் சாகச சுற்றுலா…. அதிகாரிகளின் தீவிர ஆய்வு…. நடைபெறும் மேம்பாட்டு பணிகள்….!!

சாகச சுற்றுலாவை கொண்டு வருவதற்காக அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு தற்போது கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அங்கு சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மேலும் சுற்றுலா மையங்களை மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் கூறும்போது, தமிழக அரசு நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் சாகச சுற்றுலாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்து சாகச சுற்றுலாவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சோலையாறு, ஆழியாறு அணை பூங்காக்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |