Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை பத்திரமாக வைத்திருந்தோம்…. தீவிரமாக நடைபெற்ற பணி…. பாதுகாப்போடு வந்த இயந்திரம்….!!

உள்ளாட்சி தேர்தல் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருக்கும் ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப்பகுதிகளில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதனையடுத்து பதிவுகளை கணினி மூலம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த பொது நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்துக்கு 850 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மற்றும் 350 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |