அமெரிக்க நாட்டின் அதிபர் பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டின் துணை அதிபர் வகிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 47% பேர் வாக்களித்துள்ளார்கள்.
அமெரிக்க நாட்டின் துணை அதிபரான கமலா ஹரிஷ் அந்நாட்டின் அதிபர் பதவியை வகிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 49 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற போவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறப் போவதாக அறிவிப்பதற்கு முன்பாக அவருடன் நான் தான் இருந்தேன் என்று அமெரிக்காவின் துணை அதிபர் கூறியுள்ளார். ஆனால் தற்போது பொதுமக்களிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியது அமெரிக்காவின் மேல் குறிப்பிட்ட அறிவிப்பே என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை வகிப்பது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 47 சதவீதம் பேர் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.