பெருங்குடல் பிரச்சினையின் காரணமாக குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் இருந்து வருகிறார். இவர் சில காலமாகவே பெருங்குடல் பிரச்சனையின் காரணத்தால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறும் நோக்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4ஆம் தேதி குடல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மிதமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறுவைசிகிச்சை நடந்துமுடிந்த 10 நாட்களுக்கு பிறகு தற்போது வாடிகன் திரும்பியுள்ளார்.