சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். அதனைப் போல உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக் ராஜா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கலந்துகொண்டனர். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மத்திய அரசு ஏற்றவுடன் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் பணியிட மாறுதல் உத்தரவை பிறப்பிப்பார். இதற்கான உத்தரவு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.