Categories
தேசிய செய்திகள்

‘இனி உன்னை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்’ – மனைவியின் கூந்தலை வெட்டிய கணவர்

மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து அவரின் கூந்தலை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் வசித்துவருபர் ஆரிஃப். இவர் தனது மனைவி ரோஷினி மற்றும் பெற்றோருடன் ஒன்றாக வசித்துவருகின்றார். நான்கு ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இருக்கும் இருவரிடையே அண்மையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

ரோஷினி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகித்து வரும் ஆரிஃப் தொடர்ச்சியாக அவரது நடவடிக்கைகளைக் கவனித்து வந்துள்ளார். சந்தேகம் முற்றவே தனது மனைவியின் அழகைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது கூந்தலை வெட்டி எறிந்துள்ளார். அத்துடன் அவரை வீட்டின் அறைக்குள் பூட்டிவைத்து விட்டு வெளியேறியுள்ளார்.

சாமார்த்தியமாக வீட்டிலிருந்து தப்பித்த ரோஷினி காவல் துறையிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூறியுள்ளார். ஆரிஃப்பின் இந்தச் செயலுக்கு அவரது பெற்றொரும் துணை நின்றதாக குற்றஞ்சாட்டிய ரோஷினி, ”இனி உன்னை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்” எனக் கூறி ஆரிஃப் தன்னை அவமதித்தாகவும் தெரிவித்தார். மனைவி தப்பித்த விவரம் அறித்து ஆரிஃப் தலைமறைவாக உள்ளநிலையில், அவரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Categories

Tech |