Categories
தேசிய செய்திகள்

உதவி செய்யுமாறு சுரேஷ் ரெய்னா போட்ட ட்விட் …! மறுகணமே உதவி செய்த சோனு சூட்…!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் ,இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை  கோரத் தாண்டவம் ஆடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிசன் மற்றும் மருந்துகள்  தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தினசரி பாதிப்பின் எண்ணிக்கை ,மூன்று லட்சத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் ,சுரேஷ் ரெய்னா  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள  மீரட் பகுதியில், தன்னுடைய அத்தை கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிசன் சிலிண்டர் தேவைப்படுவதாகவும் ,அதற்கு உதவி செய்யுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் ,  விபரங்களை எனக்கு அனுப்புங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் , என்று பதிலளித்தார். சுரேஷ் ரெய்னா சோனு சூட்டிடம் விவரங்களைக் கொடுக்க , சிறிது நேரத்திலேயே ஆக்சிசன்  சிலிண்டருக்கு சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா ,எனக்கு  உதவி செய்த அனைவருக்காகவும் , உடல் ஆரோக்கியத்திற்காக நான் மிகவும் பிரார்த்தனை செய்கிறேன்’ , உதவி செய்தவர்களுக்கு போதுமான நன்றியை சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா  தொற்று ஆரம்பத்திலிருந்து, இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்கு சோனு சூட், தன்னாலான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Categories

Tech |