மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.