Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரால்  உருவாக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை புதிராகவே இருந்து வருகிறது . அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது.

மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் “நேரடியாகவே” மக்களின் உயிரைப் பறிப்பதாக உள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூட இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சில காலங்களாகவே மக்கள் பிட்காயின் ,கிரிப்டோ கரன்சியில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாரு ஏமாற்றப்பட்டவர்கள் நிவாரணத்தை அரசிடம் இருந்து பெற முடியாது. என்பதை மனதில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |