Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உஷ்ணத்தை குறைக்க சுரைக்காய் சாப்பிடுங்க …

சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில்  இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம்,  சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில்  சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது .

bottle gourd க்கான பட முடிவு

 

சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால்  உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில்  நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.  சுரைக்காய் சாறு காதுவலிக்கு நல்ல மருந்து  . மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகிறது.  தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது .  சுரைக்காய் இலையுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மஞ்சள்காமாலை சரியாகிறது.

Categories

Tech |