Categories
உலக செய்திகள்

“6 வகையான தடுப்பூசி” லேட்டா வந்தாலும்…. லேட்டஸ்ட்டா வருவோம்…. கெத்து காட்டிய அமெரிக்கா….!!

முதல் தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமல்ல பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பதே முக்கியம் என அமெரிக்காவின் சுகாதார துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரேடியாக அழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் அனைத்து நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகள் அதி தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா சில நாட்களுக்கு முன்பே தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், அது வெற்றிகரமாக வேலை செய்வதாகவும் தெரிவித்தது. அதற்கு முன் தகுதி வழங்குவது குறித்தும் உலக சுகாதார நிறுவனம் புதிய கருத்து ஒன்றை இன்று தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6 வகையான தடுப்பூசிகள் தீவிர சோதனையில் உள்ளதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதல் தடுப்பூசி கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அமெரிக்கா மற்றும் உலக மக்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பதே முக்கியம் என்று ரஷ்யாவை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளார். 

Categories

Tech |