Categories
உலக செய்திகள்

ஒப்பந்தத்தை மீறிய பிரபல நாடு…. ஆத்திரமடைந்த அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் ஈரான் நாடு 90% அதிகரித்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் பொருட்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளாக யுரேனியம் எரிபொருளை அணுசக்தி மையங்களில் 3.67 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டக்கூடாது, ஈரான் குறிப்பிட்ட அளவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது. ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் ஈரான் படிப்படியாக ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீற தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஈரான் யுரேனியம் செறிவூட்டலை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவை மீறி 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் உளவுத்துறை ஈரான் 90 சதவீதம் வரை யுரேனியம் செறிவூட்டலை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத ஏனைய நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Categories

Tech |