அமெரிக்கா ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
சிரியா நாட்டில் பல பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருகின்றது. இதனை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலானது ஒரே நேரத்தில் வான் வழியாகவும் தரை வழியாகவும் நடத்தப்பட்டதால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களான அபூ அலா, அபு முவுத் அல் கஹ்தானி மற்றும் ரஹான் வாஹித் அல் ஷம்மான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய பதுங்கு குழிகள், ஆயுதக்கிடங்குகள் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ படைகள் தெரிவித்துள்ளது.