Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்… இல்லையெனில் கடைகளை அடைத்துவிடுவோம்… மருத்துவ வணிகம் எச்சரிக்கை..!!!

தடுப்பூசி வழங்குவதில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வணிகர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையெனில் மற்ற வணிகங்களை போல நாங்களும் கடைகளை அடைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் அல்லும் பகலும் அயராமல் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இல்லாமல் மருந்தகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களும் கடந்த மார்ச் மாதம் முதலே மக்களுக்காக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ வணிகர்களுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால் மற்றவர்களைப் போல நாங்களும் கடைகளை அடைத்து விடுவோம் என எச்சரித்துள்ளது. இந்த முடிவை எங்களின் உறுப்பினர்களின் உயிரைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என அந்த அமைப்பின் தலைவர் ஜே.எஸ்.ஷிண்டே மற்றும் பொதுச் செயலாளர் ராஜீவ் ஷிங்கள் அறிவித்துள்ளனர். மேலும் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் 650 பேர் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சில குறிப்பிட்ட மருந்துகளின் கட்டுப்பாடு அரசின் கைகளில் நேரடி இருப்பதாகவும், அவை மருந்தகங்களுக்கு கிடைப்பதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |