அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரியை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கொரோனாவை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பல நாடுகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பொது வெளியில் செல்ல தடை விதித்திருக்கிறது. இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் போன்ற முப்படையை சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் யூஎஸ்எஸ் வில்ஸ்டன் சர்ஜில் போர்கப்பலில் கமெண்டராக இருக்கும், லூசியன் கின்ஸ் என்ற அதிகாரி மட்டும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார். மேலும், அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் மறுத்ததால், கடற்படை அதிகாரி பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.