உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் கிடையாது. நான் உங்களிடம் தொலைபேசியில் பல தடவை இது குறித்து பேசி விட்டேன். ராஜதந்திரம், பேச்சுவார்த்தை மற்றும் ஜனநாயகம் தான் உலக நாடுகளை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த விளாடிமிர் புடின், உங்களின் வருத்தம் எனக்கு தெரிகிறது. அனைத்தும் விரைவாக முடிவடைவதை தான் விரும்புகிறோம் என தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி அமெரிக்க நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.