Categories
உலக செய்திகள்

“ஆட்சி கவிழ்ப்பிற்காக உதவியவன் நான்”…. -முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிற நாடுகளில் ஆட்சிகள் திட்டங்களுக்கு உதவி செய்ததாக கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ஜான் போல்டன் என்பவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக இருந்தார். இவர் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நடந்த கலவரம் குறித்து தொலைக்காட்சி நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆட்சி கவிழ்ப்பு திட்டங்களில் உதவி புரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன்.. அமெரிக்க நாட்டில் கிடையாது.. பிற நாடுகளில்..  ஆட்சிக் கவிழ்ப்பிற்காக அதிக பணிகள் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து தற்போது உலக அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

Categories

Tech |