Categories
உலக செய்திகள்

ரஷ்யாவும் அமெரிக்காவும் முயற்சித்தால்…. உக்ரைன் போரை நிறுத்த முடியும்…. இத்தாலி பிரதமர் பேச்சு…!!!

இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம்.

எனினும், போரை நிறுத்திவைக்க ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு உதவுவதற்கு அனைத்து கூட்டணி நாடுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு பல சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனினும், நாம் அந்த நிலைக்கு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதில், முக்கியமாக ரஷ்யாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |