Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறியாத வயதில் அவசர கல்யாணம்…. “பலிகடாவான” ஒன்றுமே அறியாத 3 மாத குழந்தை…!!

அறியாத வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரால் 3 மாத குழந்தை இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியிலுள்ள கிளாக்குளத்தில் வசிப்பவர் லட்சுமண லிங்கம்(19). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துமணி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணத்துக்கு பிறகு திருப்பூரில் தங்கியிருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துமணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து முத்துமணி வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு  ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக லட்சுமணலிங்கம் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

மேலும் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த லட்சுமணலிங்கம் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது அவருடைய மனைவி மற்றும் குழந்தையை தாக்கியதில் 3 மாத குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. இதையடுத்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துள்ளது.

பின்னர் முத்துமணியின் உறவினர்கள் லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்காமல் குழந்தையின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த காவல்துறையினர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறிய பிறகு குழந்தையை வாங்கி சென்றுள்ளனர். அறியாத வயதில் கல்யாணம் செய்து கொண்ட இவர்களால் மூன்று மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |