Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“யூரியா தட்டுப்பாடு” விவசாயிகளுக்குள் தள்ளு முள்ளு….. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் பருவ மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யப்பட்ட பயிர்கள் 40 நாட்கள் கடந்த நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யூரியா வழங்கும் சமயங்களிலும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் புதூர் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் யூரியா விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க வலியுறுத்தினர்.

Categories

Tech |