தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனுவை பரிசளித்து உத்திரவிட வேண்டும் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை பார்வையாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ கேமரா வைக்க வேண்டும் என்றும் மற்றும் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படை பணி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தன .
இவ்வழக்கை தலைமைநீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதி கேசவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதையடுத்து இரு தரப்பு வாதங்களுக்குப் பேசி முடித்த பின்னர் நீதிபதிகள் கூறியது, தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு ஒரு முதன்மை மாநிலமாக பெருமைப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கு நடக்கின்ற ஜனநாயகத்தை பிற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவின் போது சிசிடிவி கேமரா கண்காணிப்பு அவசியம் என்றும் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் ஆகிய இடங்களில் சிசிடி வீடியோ பதிவை பொருத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.