காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடை பயணத்தை பாரத் ஜோடா என்ற பெயரில் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முடித்து தற்போது தெலுங்கானாவில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த பாதயாத்திரையானது தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கும் நிலையில், அம்மாநில மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதின் ரௌத் ராகுலுடன் தெலுங்கானாவில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாதயாத்திரையின் போது போலீசார் கட்சியினரை தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் முன்னாள் அமைச்சர் நிதின் ரௌத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருடைய தலை, கண், கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் தற்போது முன்னாள் அமைச்சர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.