உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உணவகம் ஒன்றில் மக்கள் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் இருபது முறைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் அங்கிருந்த இருவர் படுகாயமடைந்ததை அடுத்து அவசர மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருத்து மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த உணவகத்திலிருந்து வெள்ளை மாளிகையானது 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாம்.
இந்த மாதிரி தாக்குதல்கல் தொடந்து 2018 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் மட்டும் 471 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 437 சம்பவங்கள் கடந்த ஜூலை மாதம் வரையிலும் நடைபெற்றுள்ளன. அமெரிக்கா தலைநகரான வாஷிங்டனில் வறுமையில் வாழும் மக்கள் இருக்கும் பகுதிகளிலேயே தொடர்ச்சியாக இச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுவரை அமெரிக்காவில் ஆண்டுக்கு 35,000 பேர் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் இறப்பதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 100 பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.