Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் கொரோனாவிற்கு மத்தியில் கோலாகல கொண்டாட்டம்!”… தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதியில்லை…!!

ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் பல்வேறு நாடுகளில் இப்போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்படி, ஜெர்மன் நாட்டில் கொரோனாவின் நான்காம் அலை தீவிரமாக பரவி வருகிறது.

எனவே, அங்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக தொடங்கிவிட்டது. நாட்டின் தலைநகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திய நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |