அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் Boston நகரத்தின் மருத்துவமனை ஒன்றில் 31 வயதான ஒரு இளைஞர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும்.
எனவே நோயாளிகள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மருத்துவமனை பின்பற்றி வருகிறது. ஆனால் அந்த இளைஞர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார். எனவே, அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அந்த இளைஞரின் பெயரை நீக்கிவிட்டனர்.
இது பற்றி அவரின் தந்தை கூறுகையில், என் மகன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். எப்படியாவது அவனை காப்பாற்றி விடுங்கள் என்று கதறி அழுகிறார். மேலும், தடுப்பூசி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. எனவே தடுப்பூசி எடுத்துக்கொள்ள அவன் மனம் மறுக்கிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை பட்டியலில் பெயரை நீக்கி விட்டது. வேறு மருத்துவமனைக்கு மாற்ற நேரமும் கிடையாது. அவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. என்று கூறியிருக்கிறார்.