மும்பையில் இன்று முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறக்க இருப்பதாக சென்ற வருடம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அந்த மையம் திறக்க இருப்பதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தகுதியான எந்த ஸ்மார்ட்போனையும் கொடுத்து எந்த ஒரு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பரிமாறிக் கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.