ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமெரிக்காவில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகரான அமர்நாத் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது “பாகிஸ்தானில் நிரந்தர உறுப்பினர் இக்கூட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான்கானோ ஒசாமா பின்லேடன் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளை தியாகி என்ற பட்டம் கொடுத்து அவர்களை போற்றி புகழ்கிறார். அதிலும் இது போன்று பல நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச மேடையில் பாகிஸ்தான் பொய்களை பரப்புவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது அனைவரையும் கூட்டு அவமதிப்பதிப்பிற்கு ஆளாக்குவதாகும். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியாவுக்கு எதிராக கூறியுள்ளது. ஆனால் உண்மையிலேயே இது குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதிலும் ஜம்மு காஷ்மீரின் முழு நிலப்பரப்பும் இந்தியாவின் உள்ளடங்கிய மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். குறிப்பாக பாகிஸ்தான் சட்டத்திற்குப் புறம்பாக கையகப்படுத்தியுள்ள பகுதிகள் கூட இந்தியாவிற்கு தான் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார்.