Categories
உலக செய்திகள்

உண்மையை உடைத்த இளவரசர் ஹாரி, மேகன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மெகன் மார்கலுக்கும்  கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தையும் அரச குடும்பத்தில் பிறந்தது. ஒரு காலகட்டத்தில்  அந்த குழந்தை  தொடர்பான பல விவாதம் அரச குடும்பத்தில் ஏற்படவே ஹாரியும் மெகனும்  இராஜ வாழ்க்கையை வேண்டாம் என்று அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். நான் கர்ப்பமாக இருக்கும் போது எங்கள் மகன் ஆர்ச்சியை குறித்து பல விமர்சனங்களை அரச குடும்பத்தினர் செய்து வந்தனர்.

என் மனதிற்கு வேதனை அளிக்கும் வகையில் பிறக்கும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் கருப்பாக இருக்குமா என்றெல்லாம் கேலியுடன் பேசியுள்ளனர். ராஜ குடும்ப வாழ்க்கை எனக்கு புதியது என்பதால் ஆரம்பகாலத்தில் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது இதனால் மனதளவில் நான் மிகுந்த துன்பத்திற்கு ஆளானேன் என்றார். அந்த குடும்பத்தில்  எனக்கு ஹாரி மட்டுமே துணையாக இருந்தார் சில நேரங்களில் வாழ்க்கையை வெறுப்பது போல் இருக்கும் நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன் என்றெல்லாம் குழப்பத்துடன் இருந்ததுண்டு.

அந்த அரச குடும்பத்தில் எலிசபெத் ராணி மட்டுமே என் மீது அன்பாக நடந்து கொள்வார் வேறு எவரும் எனக்கு பாதுகாப்பு அளித்ததில்லை. இதனால்தான் என் மகன் ஆர்ச்சியின்  பாதுகாப்பை மனதில் கருதியே அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினேன்.அவர்கள் ஆர்ச்சியை இளவரசனாக அறிவிக்கவில்லை . தற்போது நான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளேன். இங்கிலாந்து அரச குடும்பத்திற்காக  ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்க போகிறேன்.

மேலும் நான் அரச குடும்பத்தினரை பற்றி தவறாக கூற வேண்டும் என்று திட்டமிட்டு கூறவில்லை எனக்கு நடந்ததை மட்டுமே நான்  தெரிவித்துள்ளேன் என்று ஓப்ரா வின்ஃப்ரே என்ற தொலை காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாரி மெகன் மெர்க்கல் சில சுவாரஸ்யமான விஷயங்களும் பல சோகமான விஷயங்களும் பகிர்ந்தது கொண்டதாக தெரிவித்தனர்

Categories

Tech |