இங்கிலாந்து பிரதமர் மற்றும் மற்றும் சேன்ஸலர் ரிஷி சுனக்கிற்கிடையே நிலவும் மோதலுக்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பயண கட்டுப்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்னும் பொருளைக் கொண்ட சேன்ஸலர் ரிஷி சுனக்கின் கடிதம் ரகசியமாக காக்கப்பட்டும் கூட வெளியே கசிந்துள்ளது. இதனால் கடுமையான கோபமடைந்த போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக்கை சேன்ஸலர் பொறுப்பிலிருந்து வேறு பொறுப்புக்கு மாற்றுவதற்கும் திட்டம் தீட்டியுள்ளார்.
ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷியின் மீது ஏற்பட்ட கோபம் வெளியான கடிதம் குறித்து அல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் சுமார் 400 பில்லியன் பவுண்டுகளை செலவிடுவதற்கு ரிஷி சுனக் முன்வந்துள்ளார். இதனால் ரிஷிக்கு 74 சதவீதம் மக்கள் செல்வாக்கு கிடைத்துள்ளது. ஆனால் போரிஸ் ஜான்சனுக்கு 34 சதவீதம் மட்டுமே மக்கள் செல்வாக்கு உள்ளது.
ஆகையினால்தான் போரிஸ் ஜான்சனுக்கும் ரிஷிக்குமிடையே அடிக்கடி மோதல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரிஷி சுனக்கிற்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருப்பதினால் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பலரும் பதற்றமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.