செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பன்னிரண்டு ஆழ்வார், 18 சித்தர்கள் இங்கு சைவக் குறவர்கள் உண்டே ஒழிய, வேறு கிடையாது. ஹிந்து குறவர், அந்த குறவர் எல்லாம் இங்கே கிடையாது. எங்கள் மடம் சைவ மடம், சைவம் தான் தலைதூக்கியது, சைவத்தையும், தமிழையும் பிரிக்க இயலாது.
எங்களுடைய மூதாதையர்கள் அருள்மொழி சோழனும், அரிசேந்திர சோழனும் சைவ மதத்தின் பற்றாளர்கள், சிவன் நெறியாளர்கள். எங்கள் இறை தமிழ் கடவுள் முருகனுக்கு முன்பு திருமுருகாற்றுப் படை பாடவில்லை, அருணகிரிநாதர் எல்லாரும் நிராகரித்து விட்டீர்கள் என்று, இப்போது அவர்கள் பேரப்பிள்ளைகள் நாங்கள் கிளர்ந்து எழுந்தது போல, கிளந்தெழுந்த புரட்சியாளர் தான் அருணகிரிநாதர்.
அவர் வந்து வம்படியாக திருப்புகழை எங்கள் முருகனுக்கு பாடுகிறார். அந்த திருப்புகழை எங்கள் முருகனுக்கு முன்பு பாடுவதில் என்ன பிரச்சனை, ஒரு பிரச்சனையும் இல்லை. ஓதுவார்கள் எல்லாரும் வந்த பிறகு, நாங்கள் திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடும்போது, இங்கு இருக்கின்ற குருமார்கள் குருக்கள் எல்லாம் தூய தமிழில் வழிபாடு செய்தார்கள், அர்ச்சனை செய்தார்கள்.
கந்தா போற்றி, வள்ளியின் நாயகனே போற்றி கடம்பா போற்றி என போற்றி போற்றி என நாங்களும் சொன்னோம். கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேலி முருகனுக்கும் அரோகரா என நாங்க முழங்குனோம். அப்போது முடியும் என்கிற போது ஏன் செய்யவில்லை என்பதுதான் பிரச்சனை என கூறினார்.