Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் பிடிக்கல…. நைசாக தப்பித்த கும்பல்…. CCTV கேமராவால் வெளியான உண்மை…!!

கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், அவர்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனை அடுத்து மோகன்ராஜ் கடைக்கு வந்த பிறகு அங்கிருந்த பட்டுப் புடவைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளார். அப்போது ஆறு பட்டுப்புடவைகள் காணாமல் போனதால் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் 6 பட்டுப்புடவைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மோகன் ராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதன் பின்னர் கடைக்கு வந்தவர்களின் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் செல்போன் சிக்னல்களை சோதனை செய்ததில் அந்த மர்ம கும்பல் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுரையில் வசித்துவரும் முருகன், தேனியில் வசித்து வரும் மணிகண்டன், தனலட்சுமி ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |