விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த பகுதியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலரோம் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து யூனியன் பாவாலி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.