சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டார். இவர் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதனால்தான் மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை புரிகிறார்கள். இதுவரை 19 மத்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் இன்னும் 50 அமைச்சர்கள் வருவார்கள் என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட இத்தனை மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வந்ததில்லை என ஏற்கனவே அதிமுக கட்சியை சேர்ந்த கேபி முனுசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.