Categories
பல்சுவை

உங்கள் பான் கார்டில் மோசடி நடந்துள்ளதா?…. அதை கண்டுபிடிக்க இதோ சில வழிகள்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது. பணம் பரிவர்த்தனை முதல் பல விதமான அதிகாரப்பூர்வ வேலைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதல் ஆவணமாக பான் கார்டு தான் கேட்கப்படுகிறது. வருமான வரித்துறையின் அனைத்து பணிகளிலும் உங்கள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இருக்கும் முக்கியத்துவத்தை போலவே பான்‌ கார்டை வைத்து மோசடிகளும் நடக்கிறது. பான் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு யாரேனும் கடன் வாங்கி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது‌. இங்கு ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்கும் பஞ்சமில்லை.

நீங்கள் கடன் வாங்கும்போது நிகராகரிக்கப்பட்டாலும் உங்களின் சிபில் ஸ்கோர் வழக்கத்துக்கு மாறாக குறைந்து இருந்தாலும் பான் கார்டு தகவல்களை செக் செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் உங்களின் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாராவது கடன் வாங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் உங்களின் சிபில் ஸ்கோர் குறைந்திருக்கும்‌ அத்தகைய சூழ்நிலையில் உங்கள் பான் கார்டில் ஏதேனும் கடன் வாங்கப்பட்டுள்ளது என்பதை சரி பார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதற்கு, CIBIL, Equifax, Paytm, Bank Bazaar அல்லது CRIF மூலம் உங்கள் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம். CIBIL தளத்தில் அதை எப்படிச் சரிபார்ப்பது என்பதை பாப்போம்.

  •  www.cibil.com இணையதள முகவரிக்கு செல்லவும். கீழே ஸ்க்ரோல் செய்யும் போது, ​​உங்கள் CIBIL ஸ்கோரைப் பெறுவதற்கான ஆப்சனை காண்பீர்கள்.
  • அதைக் கிளிக் செய்த பிறகு, மூன்று சந்தா திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
  • உங்கள் வசதிக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்றவை உங்களிடம் கேட்கப்படும். இங்கே உள்நுழைந்து கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  • இதற்குப் பிறகு, ஐடி வகையில் வருமான வரி ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். இங்கே பான் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், அதன் பதிவைக் காண்பீர்கள்.
  • இதற்குப் பிறகு, சரிபார்ப்புக்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், அவற்றை நிரப்பி பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கவும்.
  • மின்னஞ்சல் அல்லது OTP உதவியுடன் உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  • ஒரு படிவம் கொடுக்கப்படும், அதில் விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம்.

இதனையடுத்து பான் கார்டில் எத்தனை கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்கள் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால் அல்லது உங்கள் பான் கார்ட்  எண்ணுக்கு எதிராக வேறு யாராவது கடன் வாங்கியிருந்தால், https://incometax.intalenetglobal.com/pan/pan.asp தளத்தில் புகார் செய்யலாம்.

Categories

Tech |