பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பிறநாடுகளில் பணிக்காக செல்லும் நபர்கள் எண்ணிக்கை 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானில் கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு பல மக்கள் வேலையின்றி திண்டாட செய்தது.
அதில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 76,213 நபர்களும், பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 877 நபர்களும் பிறநாடுகளில் வேலை தேடி வருகிறார்கள் என்று அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் கூறியிருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடத்தில் வெளிநாட்டில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்கை கடந்த 2020 -ஆம் வருடத்தை விட கடந்த வருடம் 27.6% அதிகரித்திருக்கிறது.