Categories
உலக செய்திகள்

“உங்களின் உள்ளாடைகளை மண்ணில் புதையுங்கள்!”.. பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மக்களின் உள்ளாடைகளை மண்ணில் புதைக்குமாறு கூறிய சம்பவம் உலகம் முழுக்க பரவியது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Agroscope என்ற பல்கலைக்கழகமானது, ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த பல்கலைக்கழகம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளாடைகளையும் மண்ணில் புதைத்து விடுமாறு கேட்டுள்ளது. இதற்கு சுமார் 1000 நபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்த உள்ளாடைகள் தோண்டி எடுக்கப்படவிருக்கிறது. அதாவது இந்த ஆராய்ச்சியானது, நாட்டின் மொத்த மண்ணின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய நடத்தப்பட்டிருக்கிறது. தோண்டி எடுக்கப்படும் உள்ளாடைகள் எந்த அளவில், எந்த பாக்டீரியாவால் மக்கியிருக்கிறது என்று ஆராயப்படவுள்ளது.

ஆராய்ச்சிகளின் முடிவுகள் வந்த பின்பு, அதனை வைத்து எவ்வாறு மண்ணை வளமாக பாதுகாப்பது என்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |