என் புகைப்படத்தை என் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர், தொண்டர் அணி தலைவர், மாணவரணி தலைவர், மகளிர் அணி தலைவர், விவசாய அணி தலைவர், மீனவர் அணி தலைவர், வழக்கறிஞர் அணி தலைவர் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதோடு சில முக்கிய குறிப்புகளும் வெளியிடப்பட்டது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நமது இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக அறிவிக்கப்பட்ட ஆணையரின் தலைவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதிகிளை மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், ரசிகைகள் அனைவரும் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை படி செயல்பட்டு நம் மக்கள் இயக்கத்தை மென்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் விஜய்யின் புகைப்படம் இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளும் மாநில மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்களின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.