Categories
திருவாரூர்

உன்னை திருமணம் செய்ய முடியாது…. காதலிய எடுத்த விபரீத முடிவு…. கைது செய்த காவல்துறையினர்….!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ராஜதுரை வாங்கிக் கொண்டு அவரை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் ராஜதுரை வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் ராஜதுரை பெற்றோரிடம் இதுகுறித்து கூறியபோது உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து மனமுடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருப்பவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் இதுகுறித்து அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜிடம்  புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் ராஜதுரை, அவரது பெற்றோர் வேதலட்சுமி மற்றும்  உறவினர்கள் இந்திராணி, செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை காதலித்து ஏமாற்றிய ராஜதுரையை கைது செய்து தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |