பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது
பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை, அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன.
இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். அந்நாட்டின் கராச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் வெட்டுக்கிளியினால் பாதிக்கும் மேல் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், உடனடியாக உதவுமாறு, பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது.