Categories
உலக செய்திகள்

கொட்டும் கனமழை…. நிலைகுலைந்த பாகிஸ்தான்…. ஆய்வில் ஐநா பொது செயலாளர்….!!!!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கு ஐநாவின் பொதுச் செயலாளர் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பருவமழையானது தீவிரமடைந்து அந்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் தாக்கமானது குறைந்து வரும் வேளையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அங்கு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1391 ஆக உயர்ந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு ஐ.நாவின் பொதுச்செயலாளரான அந்தோணியோ குட்டரஸ் சென்றுள்ளார். அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் வழங்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |