Categories
கிரிக்கெட் விளையாட்டு

முடிவு எடுத்த அம்பயர்…. சிக்னல் கொடுத்த தோனி…. வச்சி செய்யும் நெட்டிசன்கள் …!!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியத்துவமும், சுவாரசியமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய  கட்டாயத்தில் ஆடியது.7 போட்டிகளில் 2 வெற்றி,  5 தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த முறை ஐபிஎல் கனவு பலிக்கும் என்ற அடிப்படையில் ஆடியதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் பெற்று இருந்தது. முதலில் பேட் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரசிகர்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது.

இந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் நடவடிக்கைகள் வெற்றிக்கு காரணமாக இருந்தன. குறிப்பாக பந்து வீச்சிலும், பேட்டிங் வரிசையிலும் பல்வேறு மாற்றங்களை செய்தது மட்டுமல்லாமல் எப்போதும் களத்தில் கூல் கேப்டன் என்று அறியப்படும் தல தோனி இந்த போட்டியில் அப்படி இல்லை. வீரர்களுக்கு அடிக்கடி ஆலோசனை வழங்கினார். ஒவ்வொரு முறையும் வீரர்கள் எப்படி நிற்கிறார்கள் ? என்று மைதானத்தை உன்னிப்பாக கவனித்தார்.

18-வது ஓவரை தாகூர் வீசும்போது ரஷீத் கான் பேட் செய்து கொண்டிருந்தார். இரண்டாவது பந்து வைட் என நடுவர் கொடுக்க முயற்சி செய்தபோது மகேந்திர சிங் தோனி கைகளை உயர்த்தி  ஆக்ரோஷமாக முறையிட முன் வந்தார். ஆனால் தோனியின் நடவடிக்கையைப் பார்த்து அம்பயர் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். தற்போது அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் ரோல் செய்து வருகின்றனர்.

https://twitter.com/ShahKaSamar/status/1316076839450734592

https://twitter.com/Charanmass81/status/1316099354759962626

https://twitter.com/GauravK_8609/status/1316071421777379328

Categories

Tech |