Categories
உலக செய்திகள்

நடந்து வரும் உள்நாட்டுப் போர்…. இந்திய பிரதிநிதியின் உரை…. முடிவுக்கு கொண்டு வந்த ஐ.நா….!!

சிரியா நாட்டில் நடந்துவரும் உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா பாதுகாப்பு சபையில் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களினால்  உள்நாட்டுப் போரானது அரசுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 66 லட்சம் பேர் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாகவும்  67  லட்சம் பேர் தங்களது சொந்த நாட்டிலேயே வீடுகளை இழந்து தவிப்பதகாவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர பாதுகாப்பு  தீர்மானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி அவர்களும் வாக்களித்துள்ளார். இதனை தொடர்ந்து இதில் கலந்துகொண்டு பேசிய அவர் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை ராணுவ சக்தியினால் அடக்க இயலாது. எனவே பாதுகாப்பு தீர்மானம் ஒன்றே தீர்வை தரும். மேலும் சிரியாவில் உள்ள 1.3 கோடி மக்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |